Thursday, July 5, 2012



அன்பர்களே ஏதோ எனக்கு தெரிந்த தமிழில் ரமணரின் சரிதத்தை எழுதி உள்ளேன் பிழை இருப்பின் தெரியப்படுத்தவும் ..........................


ரமண சரிதம்

கணபதி துதி

மூதிரை மைந்தன் அவன் 
மும் மலம் அற்றவன் 
தீதுறு மாயையை ஞானத்
தீயினில் எரித்தவன்
வேதியுரு கொண்டனன் எங்கள்
வேங்கட ரமணனன்

ஞான திருவுரு கொண்டனன்
ஞாலம் மேயுற செய்தனன் 
மோன மொழி கொண்டிலங்கி
மோக வாழ்வழித்தனன்
தேனம் அவன் அன்பினில் கார்
மேகம் அவன் அருளினில்

தேனினும் தெவிட்டா மொழியினன்
தெய்வத்திற் தெய்வமவன்
நானெனும் அகமழித்தவன்
நற்பிரம்மத்தில் திளைத்தனன்
நானும் அவன் வாழ்வுரைக்க
நாட அருள்வன் கணபதி

அருணாசலேஸ்வரன் துதி 

தான்என்னும்   அகம் கொண்டு தாழா மால் மறையோர்க்கு
வான்உள்ளும் வளர்ந்துனர்த்திய அருணை வாழ் ஈசன் 
தேன்உண்ணும் வண்டுஉறை  மலர் தார் அணி அம்மை  நீங்காது
தான் துன்னும் இடபாகத்தவன் தாள் பணிவாம்.

சேஷாத்ரி சுவாமிகள் துதி
பூவொன்றில் புணர் வண்டுபுரை  ஆன்மநிலை முனிவன்
மேவொன்றும் மெய்ஞானம் மேவிடு  மெய்சித்தன்
சேய் ஒன்றும் செயல்லொப்ப சேஷாத்ரி முனி அவன் 
தாள் ஒன்றும்  என் தலை  தாழ்ந்து யாண்டும்.

திருச்சுழி
பன்னரும் பதி கொண்டிலங்கும் 
பரதமிசை எங்கள்
தென்னரும் தமிழ்திரு நாட்டின் 
தென்திசை தேர்ந்து 
முன்னரும் வந்தமர் முக்கண்ணன் அம்   
மூத்த திருச் சுழியதில்

வின்னவரும் வியந்தவர்  
விழியகல நோக்கும் 
தன்னரும் இறை தொண்டேற்றி  
தரணி சிறந்தோங்க
நன்னரும் அறவோர்
நனி சிறந்திலங்கினரே

 ரமணரின் பெற்றோர்  - அழகம்மை - சுந்தரம் ஐயர்

இத்தலம் மீதினில் இன்புறு வாழிளநங்கை
பத்தியில்  மேயுறப் பரமன்  சேவைதனை
புத்தியிற் நிறுத்தினள்; பார்புகழ் அறவோர் 
மத்தியிற் வளர்அவ்வந்தணர் குலத்தம்மை

வறிந்தோர்க்கு வருந்தினள்; வருவோர்க்கு வழங்கினள்;
மறிந்தோர் மறலியிடை கண்டு மனம் இரங்கினள்;
உறியோர்க்கு உதவினள்; உள்ளத்தில்  பக்தி
செறிந்தோர்க்கு அன்பினள்! அழகம்மையவள்!

வித்தகன் அவள்பதி
விளை யருள் சுந்தரன்
நித்திலம் கண்டிரா 
நிகரிலா அறவோன்
நித்தமும் நாடுவோர்க்கு
நன்று  செய் கொடையோன்
சித்தமும் மாலிடம் நிறுத்தி 
சிறந்தனன் பத்தியில் தான் 

பரமனின் சேவையோடு உயிர்ப்
                பதியின் சேவையும் பதிந்து
ஒருமனதிர் கொண்டெய்தி
யோங்கச் சிறந்தவள்
இருமெய் கொண்டு இயங்கினும்
ஓருயிர் கொண்டொழுகினர்


கருவிழி நின்றகலாது
கண்ணி மையென அருகினர்- இவ்  
விருகாதலர் அறம்கண்ட மழுகொள்  
இறைவனும் அம்மையிற் - புனித
கருவறை கண்டு அமர
             கருதினன் உவகையிர் அன்றே  

ரமணரின் பிறப்பு
ஆதிரை நன்னாளில் 
அந்திமறை நள்ளிரவில் 
ஆதிரை மீன்மறைய 
அடுத்துவரு கழைஎழ 
மூதுரு மருத்துவி சேதமுறுகண்ணும் 
                மூண்ட ஒருசோதி காண  

மேதினி சிறந்திட 
மெய்ஞானம் உரைத்திட
சூதுசெய்திடு மாயைச் 
சூரனை வதைத்திட- நமை
வாதுசெய்திடு  இச்சக      
வாழ்வினின்று உய்த்திட
 தீதில் அழகம்மை ஈன்றனள் 
தீந்தளிர் அண்ணலை தான்  

உதித்தது ஞானப் பேரொளி 
உலகத்து உயிரெலாம் 
துதித்து மகிழ்ந்திட ;
துய்ஞானம் பக்தி வினை மூன்றும் 
பதித்து வந்தது பட்டொளி 
பார் மிசைஎல்லாம் பரஞானம்
விதைத்துச் சென்றிட விளைந்தது
காண் அப்பேரொளி.

. . . தொடரும் 

No comments: